ஏற்றுமதி ஊக்​கு​விப்பு திட்டத்தின் 8 அம்​சங்​கள்: அடுத்த வாரம் செயலாகத் துறைக்கு வர வாய்ப்பு

புதுடெல்லி, பிப். 13- ஏற்றுமதி ஊக்​கு​விப்பு திட்​டத்​தின் 8 முக்​கிய அம்​சங்​களை செயல்​படுத்​து​வதற்​கான பணி​கள் இறுதி கட்​டத்தை எட்​டி​யுள்​ள​தால் அடுத்த வாரம் இதற்​கான அதிகாரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யாகும் என தெரிகிறது. மத்​திய அமைச்​சரவை கடந்த ஆண்டு நவம்​பர் மாதம், ரூ.45,000 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​பீட்​டில் 2 திட்டங்களுக்கு ஒப்​புதல் அளித்​தது. இதில் ஏற்​றுமதி ஊக்குவிப்பு திட்​டத்​துக்கு ரூ25,060 கோடி​யும், கடன் உத்தரவாத திட்​டத்​துக்கு ரூ.20,000 கோடி​யும் ஒதுக்கப்பட்டன. இரு​முனை திட்​டங்​கள்: இந்த ஏற்​றுமதி ஊக்​கு​விப்​பு, ‘நிர்யாத் புரோத்​சாகன்’ (நிதி சார்ந்த உதவி​கள்) மற்​றும் ‘நிர்யாத் திஷா’ (நிதி சாராத உதவி​கள்) என இரண்டு துணைத் திட்​டங்​களின் கீழ் செயல்​பட​வுள்​ளது. நிர்​யாத் புரோத்​சாகன் திட்​டத்​தின் கீழ், குறு, சிறு மற்​றும் நடுத்தர ஏற்​றும​தி​யாளர்​களுக்கு குறைந்த வட்​டி​யில் கடன் கிடைப்​பது உறு​திப்​படுத்​தப்​படும். ஏற்​றும​திக்கு முந்தைய மற்​றும் பிந்​தைய கடன்​களுக்​கான வட்டி மானியம், இ-காமர்ஸ் ஏற்​றும​தி​யாளர்​களுக்​கான கடன் அட்​டைகள் மற்​றும் புதிய சந்​தைகளுக்​கான கடன் மேம்பாட்டு வசதி​களும் இதில் அடங்​கும். நிர்​யாத் திஷா திட்​டத்​தின் கீழ் ஏற்​றுமதி பொருட்​களின் தரம், பேக்​கேஜிங், சர்​வ​தேச கண்​காட்​சிகளில் பங்​கேற்பு மற்​றும் தொலை​தூர மாவட்ட ஏற்​றும​தி​யாளர்​களுக்​கான போக்​கு​வரத்து மானி​யம் ஆகிய​வற்​றுக்கு இத்​திட்​டம் உதவும். மத்​திய அரசு ஏற்​கெனவே கடந்த டிசம்​பரில் ரூ.4,531 கோடி மதிப்​பிலான சந்தை அணுகல் திட்​டத்​தை​யும், ஜனவரி மாதம் ரூ.7,295 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி கடன் தொகுப்பை​யும் அறி​வித்​திருந்​தது. இந்​தத் திட்​டங்​கள் அனைத்​தும் 2025 முதல் 2031 வரையி​லான ஆறு ஆண்டுகளில் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இது குறித்து வர்த்தக அமைச்சக உயர் அதி​காரி கூறுகையில், “ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு இயக்​கத்​தின் 8 முக்கிய அம்சங்களைத் தொடங்​கு​வதற்​கான பணி​கள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளன. அடுத்த வாரம் இதற்கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யாகும். குறிப்பாக, இ-காமர்​ஸ் மற்​றும் சரக்கு கிடங்கு வசதிகளுக்கு இதில் முக்​கி​யத்​து​வம்​ அளிக்கப்படும்” என்றார்.