Home செய்திகள் உலக செய்திகள் ஏவுகணை பற்றாக்குறை: இந்தியாவின் முக்கிய பங்கு

ஏவுகணை பற்றாக்குறை: இந்தியாவின் முக்கிய பங்கு

கீவ், ஆகஸ்ட் 30- ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ஆசிய நாடுகள் அவற்றுக்கு ஆதரவாக உருவெடுத்துள்ளன. உக்ரைன்-ரஷ்யா போரின் போது, ஐரோப்பிய நாடுகள் ஏராளமான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன. இதனால் நேட்டோ படைகளின் ஏவுகணை அளவு குறைந்துள்ளது.அமெரிக்க நிறுவனங்கள், உக்ரைனுக்கு தங்களின் தொழில்நுட்பத்தை பகிர மறுத்துள்ளன. இதனால் ஐரோப்பா ஏவுகணை பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், தென் கொரியா ஐரோப்பாவுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.இந்தியாவும் தனது தொழில்நுட்பங்களை தனியாருக்கு வழங்கி, ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2030க்குள் தனது பாதுகாப்பு அம்சத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, இந்தியா ஐரோப்பிய நாடுகளுக்கு ஏவுகணை உதிரி பாகங்களை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இந்தியா விரைவில் ஆசியாவின் முக்கிய நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய நாடுகளிடம் ஏவுகணை தொழில்நுட்பத்தை பகிர்ந்துக்கொள்வதில் நமக்கு பெரிய சிக்கல் ஏதும் கிடையாது. ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், தென்கொரியா போன்ற நாடுகளுடன் இணைந்து ஏவுகணை ஆராய்ச்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். எனவே எதிர்காலத்தில் ஏவுகணை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியாதான் டாப் டக்கராக மாறும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.