ஒரே நாளில் பல லட்சங்களை அள்ளிய ராமநாதபுரம் மீனவர்

ராமநாதபுரம்:ஜூலை 11- ராமநாதபுரத்தில் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்க்கு டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராமல் கொத்தாக வலையில் சிக்கிய மீன்களால் மகிழ்ச்சி அடைந்த அந்த மீனவர், சக மீனவர்கள் உதவியுடன் அவற்றை கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த மீன்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் இருக்குமாம். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள தொண்டி புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். மீனவரான இவர் வழக்கம் போல தனது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரிய அளவிலான பாறை மீன்கள் அவரது வலையில் சிக்கியுள்ளது. ஒரே வலையில் சிக்கிய 15 லட்சம் இதனால், மகிழ்ச்சி அடைந்த மீனவர் கண்ணன், அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களையும் விரைவாக வருமாறு கூறினார். அவர்களும் அங்கு விரைந்த நிலையில், வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் தொக்காக தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர் மீனவர்கள். 5 டன் எடை அளவுக்கு மீன்கள் மொத்தமாக கிடைத்த நிலையில், இந்த மீன்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான பாறை மீன்கள் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் சிக்குவது அரிதாக பார்க்கப்படுகிறது. ஆழ்கடலுக்கு விசைப்படகில் செல்லும் மீனவர்கள் வலையில் மட்டுமே சிக்கக்கூடிய இந்த பாறை மீன்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கியது பலருக்கும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் அளித்தது.நெட்டிசன்களும் பாராட்டு இந்த மீன்களை கரைக்கு கொண்டு வந்துனர்.15 லட்சம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ள நிலையில் ஒரே நாளில் லட்சாதிபதியாகிவிட்டாரே என அப்பகுதி மீனவர்கள் பேசிக்கொண்டதை பார்க்க முடிகிறது. கடலுக்கு கஷ்டப்பட்டு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டிசன்களும் பதிவிட்டு வருகிறார்கள். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மீனவர்கள் வலையில் அரிய வகை கூறல் மீன்கள் பிடிபட்டது பரபரப்பாக பேசப்பட்டது. மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடை கொண்ட இரண்டு கூறல் மீன்கள் மாட்டின.