Home செய்திகள் தேசிய செய்திகள் ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை: மே 13-
இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமை​யாக சரிவடைந்​தது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.
கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் ரூபாய் மதிப்பு சரிவு காரண​மாக இந்​திய பங்​குச் சந்​தைகள் இந்த வாரத்​தின் முதல் நாளான திங்​கள்​கிழமை சரிவை சந்​தித்​தது. இந்​நிலை​யில் 2-வது நாளான நேற்​றும் கடும் வீழ்ச்​சி​யடைந்​தது. வர்த்தக முடி​வில் மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559-ல் நிலை பெற்​றது.
சரிவுக்​கான 5 முக்​கிய காரணங்​கள்
தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 436 புள்​ளி​கள் சரிந்து 23,379-ல் நிலை பெற்​றது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது. சந்தை​யின் இந்​தச் சரிவுக்கு மிக முக்​கிய​மான காரணங்​களில் ஒன்​று, அமெரிக்கா – ஈரான் இடையி​லான மோதலில் மீண்​டும் ஏற்பட்​டுள்ள நிச்​சயமற்ற தன்​மை​யாகும்.பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரு பேரலுக்கு 105 டாலர் என்ற அளவை மீண்​டும் தாண்​டி​யுள்​ளது. இது எரிபொருளை இறக்​குமதி செய்​யும் இந்​தி​யா​வைப் போன்ற நாடுகளுக்​குப் பெரும் சுமை​யாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் 95.55 ஆக வீழ்ச்​சி​யடைந்​தது.
கச்சா எண்​ணெய் விலை உயர்வு இந்​தி​யா​வின் பொருளாதாரத்தைப் பாதிக்​கும் என்ற கவலையே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்​கா​வின் 10 ஆண்​டு​கால கடன் பத்​திர லாபம் 4.423% ஆக உயர்ந்​துள்​ளது. கடன் பத்​திரங்​களில் லாபம் அதி​கரிக்​கும்​போது, முதலீட்​டாளர்​கள் பங்​குச்​சந்​தை​யில் இருந்து பணத்தை எடுத்து பாது​காப்​பான பத்​திரங்​களில் முதலீடு செய்​யத் தொடங்​கு​வார்​கள். இது பங்​குச்​சந்​தைக்கு அழுத்​தத்​தைக் கொடுக்​கிறது.
வெளி​நாட்டு நிறுவன முதலீட்​டாளர்​கள் (எப்​ஐஐ) தொடர்ந்து இந்தியப் பங்​கு​களை விற்று வரு​கின்​றனர். கடந்த திங்​கட்​கிழமை மட்​டும் சுமார் ரூ.8,438 கோடி மதிப்​பிலான பங்​கு​களை அவர்​கள் விற்​றுள்​ளனர்​. இது தொடர்​ந்​து ஐந்​​தாவது வர்​த்​தக தின​மாக நீடிக்கிறது. இது​போன்​ற ​காரணங்​களால்​ இந்​தி​ய பங்​குச்​ சந்தைகள்​ கடும்​ சரிவை சந்​தித்​து வருகின்​றன.