ஓய்வூதியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 24- மத்​திய நிதித்​துறை அமைச்​சகம் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: பொதுத்​துறை காப்​பீடு நிறு​வனங்​களின் ஊழியர்​கள் மற்​றும ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் ஊதிய உயர்வு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படும். இதற்கு ரூ.8,170.30 கோடி செல​வாகும். நபார்டு வங்கி ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களுக்​கான ஊதி​யம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​படும். இதன் மூலம் ஆண்​டுக்கு கூடு​தலாக சுமார் ரூ.170 கோடி செல​வாகும். நிலு​வைத் தொகை​யாக மட்​டும் சுமார் ரூ.510 கோடி வழங்​கப்​படும். ஓய்​வூ​தி​யம் மாற்​றியமைக்​கப்​பட்​டதன் மூலம் நிலு​வைத் தொகை ரூ.50.82 கோடி ஒரே தவணை​யில் செலுத்​தப்​படும். ரிசர்வ் வங்கி ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள், குடும்ப ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் ஊதி​யத்தை மாற்​றியமைக்க மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதன் மூலம் ஓய்​வூ​தி​யம் மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் 10 சதவீதம் அதி​கரிக்​கும். இது கடந்த 2022-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி முதல் அமலாகும்.