நாமக்கல்: ஆக. 5-
நாமக்கல் அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 3 மகள்களைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதற்காக பலரும் வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு என வீட்டுக் கடனை வாங்குகின்றனர். குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் என்றால் அது வீட்டுக் கடன் தான். ஆனால், பெரும் தொகை கடனாக வாங்கும்போது அதற்கான வட்டியும் அதிகளவில் இருக்கும். இதனால், சிலர் கடும் சிரமத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் உருவாகிறது.
இந்நிலையில், நாமக்கல் அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 3 மகள்களைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36). விவசாயியான இவருக்கு மனைவி, பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகிய 3 மகள்களும் , மகன் ஒருவரும் உள்ளார். கோவிந்தராஜ் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டுக் கடனை செலுத்த முடியாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, கோவிந்தசாமி தனது மனைவி மற்றும் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், 3 மகள்களையும் வெட்டிக் கொலை செய்ததோடு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
வீட்டுக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் 3 மகள்களைக் கொன்று விவசாயி கோவிந்தசாமியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.