கடற்படையில் போர் விமானியாகபயிற்சி பெற்ற முதல் பெண்

புதுடெல்லி: ஜூலை 5-
இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடற்படை விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது.இதில் லெப்​டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகிய இவரும் கவுர​வ​மிக்க ‘விங்ஸ் ஆப் கோல்​டு’ விருதை ரியர் அட்​மிரல் ஜானக் பெல்​வி​யிடம் இருந்து பெற்​றனர். இந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்​றுள்​ளார்.இதன் மூலம் இந்​திய கடற்​படை ஒரு வரலாற்று சிறப்​புமிக்க மைல் கல்லை எட்​டி​யுள்​ளது. தடைகளை உடைத்​து, கடற்​படை​யில் பெண் போர் விமானிகளின் புதிய சகாப்​தத்​திற்கு ஆஸ்தா பூனியா வழி வகுத்​துள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.