கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை: ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆக. 13-
இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது
இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு
துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும்.
இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன.இதனை கருத்​தில் கொண்டு புதிய சந்​தைகளை கைப்​பற்​று​வ​தில் ஏற்றுமதியாளர்​கள் தீவிர​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு ராஜீவ் கூறி​னார். அமெரிக்கா​வுக்​கான பதப்​படுத்​தப்​பட்ட இறால் ஏற்​றும​தி​யில் இந்​தியா தற்​போது முன்​னிலை​யில் உள்​ளது. இதன் சந்​தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலை​யில் 2024 -ல் 40.6% -ஆக கணிச​மாக அதி​கரித்​துள்​ளது. இந்​தநிலை​யில், அமெரிக்​கா​வின் அதிக வரி விதிப்​பின் காரண​மாக இந்​தி​யா​வின் சந்​தைப் பங்கு கடுமை​யாக பாதிக்​கப்​படும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால், இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் மாற்று சந்​தைகளை தேட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.
இந்​தி​யா​வின் சந்தை வரம்பை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு உத்​தியை வகுக்க ஏற்​றும​தி​யாளர்​களு​டன் மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை​யில் ஈடு​பட்​டுள்​ளது