கடைசி நாளில் என்ன நடக்கும்?

லண்டன், ஜூலை 14- இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை பென் டக்​கெட் 0, ஜாக் கிராவ்லி 2 ரன்​களு​டன் தொடங்​கினர். நிதான​மாக விளை​யாடிக் கொண்​டிருந்த பென் டக்​கெட்​டை, முகமது சிராஜ் வீழ்த்​தி​னார். அவர் 11 ரன்​கள் மட்​டுமே எடுத்​தார்.
இதையடுத்து ஆலி போப் களம்​பு​குந்​தார்.
ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்​க​வில்​லை. 17 பந்​துகளைச் சந்​தித்த நிலை​யில் 4 ரன்​கள் மட்​டுமே எடுத்​திருந்த ஆலி போப், சிராஜ் வீசிய பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார். 22 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜாக் கிராவ்​லி, ஜெய்​ஸ்​வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.
அதைத் தொடர்ந்து களத்​துக்கு வந்த ஹாரி புரூக் அதிரடி​யாக விளை​யாடினார். அவர் 19 பந்​துகளில் 23 ரன்​கள் (4 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்) சேர்த்த நிலை​யில் அவர் பெவிலியன் திரும்​பி​னார்.
அதன் பிறகு 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் பென் ஸ்டோக்​ஸும், ஜோ ரூட்​டும் நிதான​மாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர்.