
வாஷிங்டன்: ஜனவரி 27-
இந்தோனேசியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் ஒன்று, 4 நாட்கள் கழித்தும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.. வானில் தோன்றும் அதிசயம், நிலத்திலும் தோன்றிவிட்டதோ? என்று பொதுமக்களுக்குள் வியப்பு மேலிட்டுள்ளது.. என்ன நடந்தது மேற்கு சுமத்ரா பகுதியில்? மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள ஒரு விவசாயி, எப்போதும் போல தன்னுடைய நிலத்திற்கு வேலை செய்யப் போயிருக்கிறார். அங்கேதான் அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
நிலத்தில் தோன்றிய அதிசயம் – மாய நீர் தன்னுடைய விவசாயி நிலத்தின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியிருந்ததை பார்த்தார். அருகில் சென்று பார்த்தால், அப்படியே ஒரு கிணறு போல அது மாறியிருந்தது. மேலும், அந்த பள்ளத்தில் தானாகவே தண்ணீர் சுரந்து நிறைந்து நின்றது. இதை பார்த்த அந்த விவசாயி உடனே கிராம மக்களிடம் விஷயத்தைச் சொன்னார். மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே ஓடி வந்தார்கள். “இது கடவுள் கொடுத்த புனித தீர்த்தம்”, “இந்த அதிசய தண்ணீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் குணமாகும்” என்று ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.. கானல் நீரை அள்ளிய மக்கள் மேலும், கையில் கிடைத்த பாட்டில், கேன் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று அந்தத் தண்ணீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்கள்..,. கையில் கொண்டு வந்திருந்த பாட்டில், கேன்களில் இந்த தண்ணீரை அள்ளி கொண்டு போனார்கள்.. இது அத்தனையும் வீடியோவாக சோஷியல் மீடியாவிலும் வெளியானது…இதுகுறித்த விஷயம் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியதுமே, அவர்கள் ஓடி வந்து அந்த தண்ணீரை எடுத்துச் சென்று சோதனை செய்தார்கள்…. அதன் முடிவுகள் வந்தபோதுதான் மக்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அது தண்ணீரே கிடையாதாம்.. அந்தத் தண்ணீர் பார்ப்பதற்கு தெளிவாக இருந்தாலும், அதில் “ஈ-கோலை” (E. coli) என்கிற ஆபத்தான பாக்டீரியாக்கள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தக் கிருமிகள் மனிதர்களின் குடலைத் தாக்கி மோசமான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்கும். மர்ம பள்ளத்தில் கண்ணாடி நீர் இது புனித நீர் கிடையாது, நிலத்தடியில் மண் சரிவு ஏற்பட்டதால் உருவான ஒரு குட்டை… இதில் சுற்றியுள்ள அழுக்குகளும், விலங்குகளின் கழிவுகளும் கலந்திருக்க வாய்ப்பு அதிகம். “தண்ணீர் சுத்தமாகத் தெரிந்தாலும் அதை யாரும் குடிக்க வேண்டாம்” என்று அதிகாரிகள் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

















