கனடா குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பலனடையும் இந்திய வம்சாவளியினர்

ஒட்டாவா, நவ. 25- கனடாவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து,
இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு அதிக பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இழப்பு கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம், கனடாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கனடா குடிமகன், தான் வசிக்கும் வெளிநாட்டில் பிறக்கும் தன் குழந்தைக்கு தானாகவே கனடா குடியுரிமை அளிப்பதை தடுத்தது. இதனால், வெளிநாட்டில் பணி நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வாழும் கனடா குடியுரிமை பெற்ற பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைகள் தங்களது பாரம்பரிய கனடா குடியுரிமையைப் பெற முடியாமல், குடியுரிமை அற்றவர்களாக அல்லது கனடா குடியுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனால் குடியுரிமை இழந்த கனடியர்கள் என்ற ஒரு குழு உருவானது. இதை யடுத்து, இச்சட்டம் கனடா அரசியலமைப்பில் உள்ள சமத்துவ உரிமைகளுக்கு எதிரானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.