
கரூர்: மே 15-
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடசேரி, காரணம்பட்டி புதுப்பட்டி கல்லுப்பட்டி சங்காயிபட்டி கீழவெளியூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். கிராம மக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். தன்படி இரட்டை மாடு பூட்டிய 40 மாட்டு வண்டி 300 டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களுடன் தங்களது 7 தலைக்கட்டு கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தடைந்தனர்.இவர்கள் அனைவரும் இன்று மேலூர் சாலையில் உள்ள தோப்பில் தங்கி அன்னதானம் வழங்கி பின்னர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு பெருமாளுக்கு காணிக்கையினை வழங்கி, நம்பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை மறுதினம் தங்களது யாத்திரை நிறைவு செய்துள்ளது மீண்டும் மாட்டு வண்டிகளில் ஊர்களுக்கு செல்வர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாரம்பரியம் மாறாமல் கரூரிலிருந்து மாட்டு வண்டியில் பயணித்து ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபாடு செய்யும் 7 கிராம மக்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடசேரி, காரணம்பட்டி புதுப்பட்டி கல்லுப்பட்டி சங்காயிபட்டி கீழவெளியூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
தன்படி இரட்டை மாடு பூட்டிய 40 மாட்டு வண்டி 300 டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வழிபாட்டிற்குத் தேவையான மற்றும் அன்னதானத்திற்கு தேவையான பொருட்களுடன் தங்களது 7 தலைக்கட்டு கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தடைந்தனர்.இவர்கள் அனைவரும் இன்று மேலூர் சாலையில் உள்ள தோப்பில் தங்கி அன்னதானம் வழங்கி பின்னர் கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு பெருமாளுக்கு காணிக்கையினை வழங்கி, நம்பெருமாளையும் தாயாரையும் வழிபாடு செய்துவிட்டு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை மறுதினம் தங்களது யாத்திரை நிறைவு செய்துள்ளது மீண்டும் மாட்டு வண்டிகளில் ஊர்களுக்கு செல்வர்.5 வருடத்திற்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் 7பூசாரிகளைக் கொண்டு, குறிகேட்டுவிட்டு பின்னர் ஊர்பெரியவர்கள் தலைமையில் புறப்பட்டு வந்து வழிபாடு நடத்திச் செல்வதாகவும், தங்களது பாட்டன் முப்பாட்டன் காலம்தொட்டே இவ்வாறு வழிபாடு செய்வதனால் கடவுளின் அனுக்கிரகம் கிடைப்பதோடு, சுபிட்சமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டுவண்டிகளில் உற்சாக மகிழ்ச்சியில் நகர்ப்புறங்களில் வருகை தந்த கிராம மக்களின் வருகையினை நகர்ப்புறவாசிகள். ஆச்சரியத்துடன் கண்டதோடு தங்கள் செல்போன்களில் பதிவு செய்யவும் தவறவில்லை.


















