கர்நாடகத்தில் டெய்லர் ராஜா கைது

கோவை: ஜூலை 11-
கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கில் தேடப்​பட்டு வந்த டெய்​லர் ராஜா, 29 ஆண்​டு​களுக்கு பிறகு கைது செய்​யப்​பட்​டார். 1998-ல் கோவை​யில் நடந்த குண்​டு​வெடிப்​பு​களில் 58 பேர் கொல்​லப்​பட்​டனர். இது தொடர்​பாக சிபிசிஐடி சிறப்​புப் புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.
இவ்​வழக்​கில் அல்​-உம்மா இயக்​கத்​தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், உக்​கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்​லர் ராஜா (எ) ஷாஜ​கான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்​மான் ஆகியோரை போலீ​ஸார் தேடி வந்​தனர். இரு​வர் குறித்த தகவல்​களைத் தெரி​வித்​தால் ரூ.2 லட்​சம் லட்​சம் சன்​மானம் வழங்​கப்​படும் என போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர்.
இதற்​கிடை​யில், கோவை குண்​டு​வெடிப்பு வழக்​கு, மேற்கு மண்டல தீவிர​வாத தடுப்​புப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டு, எஸ்​.பி. பத்​ரி​நா​ராயணன் தலை​மையி​லான போலீ​ஸார் இரு​வரை​யும் தேடி வந்​தனர். கடந்த வாரம் ஆந்​தி​ரா​வில் பதுங்​கி​யிருந்த அபுபக்​கர் சித்​திக், முகமது அலி ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.