கர்நாடக அமைச்சர் திடீர் ராஜினாமா

பெங்களூரு, ஆகஸ்ட் 12-
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசில் அமைச்சராக பதவி வகித்து வந்த கே.என். ராஜண்ணா இன்று பகல் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் இவர் இவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. வாக்குகள் திருடப்படுவது குறித்து இவர்ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலத்தில்
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. மகாதேவபுராவில் வாக்கு மோசடிக்கு எங்கள் அலட்சியமே காரணம் என்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். கட்சி உயர்மட்டக் குழு இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டது. ராஜண்ணாவிடம் இருந்து ராஜினாமாவைப் பெறுமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு உயர்மட்டக் குழு அறிவுறுத்தியிருந்தது.
சட்டமன்ற அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, முதல்வர் சித்தராமையாவின்தனிப்பட்ட செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதை உறுதிப்படுத்திய இவர் விரைவில் முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக கூறினார்