கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்

திருப்பதி: பிப்ரவரி 11-
ஆந்திராவில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்டி ஆட்​சி​யில், திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு கலப்பட நெய் விநி​யோகம் செய்யப்​பட்​டுள்​ளது. இதில் விலங்​கு​கள் கொழுப்பு கலந்​திருப்​ப​து தெரிய​வந்​தது. கழிவறையை கழுவ பயன்​படுத்​தப்​படும் ஒரு​வித ரசாயனம் கலக்​கப்​பட்​ட​தாக​வும் சிறப்பு புல​னாய்வு குழு அறிக்கை அளித்​துள்​ளது.
இந்​நிலை​யில் இது தொடர்​பாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வுக்கு திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் பெரிய ஜீயரான மடா​திபதி சடகோபன் ராமானுஜர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:
கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் மிக​வும் நம்​பிக்​கை​யுடன் சுவீகரிக்​கும் லட்டு பிர​சாதத்​தில் பயன்படுத்​திய நெய்​யில் கலப்​படம் நடந்​துள்​ள​தாக சிபிஐ விசாரணை குழு உறு​திப்​படுத்​தி​யது என்னை மிக​வும் கவலைக்கு உள்​ளாக்​கியது. தின​மும் சுவாமிக்கு பூஜை செய்து நைவேத்​தி​யம் படைக்​கும் எனக்கு இது ஒரு மகாபாவம் என்று மனதில் படு​கிறது.கலப்​படம் நடந்​தது தெரிந்தே கடந்த ஆட்​சி​யினர் அந்த நெய்யை சுவாமி​யின் பிர​சாதத்​தில் கலந்​தது மிகப்​பெரிய பாவச்​செயல்.
இது தர்​மத்​துக்கு எதி​ரானது. மிக​வும் நம்​பிக்​கை​யுடன் திருமலைக்கு வந்து லட்டு பிர​சாதத்தை வாங்கி அதனை சாப்பிட்ட பக்​தர்​களின் மனம் எவ்​வளவு பாதிக்​கப்​பட்​டிருக்​கும் என நினைத்து கவலைப்​படு​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.