
வாஷிங்டன், ஜன. 24- நேட்டோ என்பது, அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவம். இதில் ஐரோப்பிய நாடுகளின் படைகளும் இருக்கின்றன. இப்படி இருக்கையில், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேட்டோவை நம்பி பிரயோஜனம் இல்லை என்று டிரம்ப் கூறியிருக்கிறார். நேற்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கிறார். நேட்டோ ராணுவக் கூட்டணியின் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கிய டிரம்ப், அமெரிக்காவுக்கு நேட்டோவின் உதவி ஒருபோதும் தேவைப்பட்டதில்லை என்றார்.
என்ன பிரச்சனை? இக்கட்டான சூழல் வந்தால்.. நேட்டோ நாடுகள் அமெரிக்காவுக்கு உதவ முன்வராது என்றும் டிரம்ப் சாடியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் மோதலின்போது நேட்டோ நாடுகளின் படைகள் முன்வரிசையில் இருந்து சற்று விலகியே நின்றதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தக் கருத்துக்கள் பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் பரவலான எதிர்ப்பைத் தூண்டின. 20 ஆண்டுகால ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகள் சந்தித்த பெரும் உயிர் மற்றும் பொருளிழப்புகளை பிரிட்டன் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்ட தொடங்கியுள்ளனர். பிரிட்டனின் தியாகம் கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் (9/11 தாக்குதல்) நடந்தது. நேட்டோ அமைப்பின் விதி-5, அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால்.. பதிலுக்கு மற்ற நாடுகள் ராணுவ ரீதியாக உதவ வேண்டும். இந்த விதி ஒரேயொரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் அமெரிக்காவுக்காகத்தான். 9/11 தாக்குதல் சமயத்தில் பிரிட்டன் அமெரிக்காவுடன் கை கோர்த்தது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க 1.5 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பியது. டென்ஷன் ஆன பிரிட்டன் இந்த பணியில் 457 வீரர்களை பிரிட்டன் இழந்தது. மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான வீரர்கள் காயமடைந்திருந்தனர். இப்படி தோளோடு தோள் நின்ற, நாடுகளை டிரம்ப் எடுத்த எடுப்பில் உதாசீனப்படுத்தியிருப்பது பிரிட்டனை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவு பிரிட்டன் அமைச்சர் ஸ்டீபன் கின்னாக், டிரம்பின் கருத்துகளை மிகவும் ஏமாற்றமளிப்பதாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பியப் படைகள் பெரும் விலையைக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பல பிரிட்டன் வீரர்களும், பிற ஐரோப்பிய நேட்டோ கூட்டாளி நாட்டு வீரர்களும், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற இடங்களில் அமெரிக்கா தலைமையிலான பணிகளுக்கு ஆதரவாகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.



















