Home மாவட்டங்கள் பெங்களூர் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

உடுப்பி: ஆக. 21-
காங்கிரஸ் பிரமுகர் டேவிட் டிசோஜா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக,
தலைமறைவாக இருந்த மற்றொரு நபரை குந்தாபுரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (வயது 31) என்பவரே
கைது செய்யப்பட்டவர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்வானி பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இவரைப் பிடித்தனர்.
இவருக்கு இக்கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியது மற்றும் பண உதவி செய்ததில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இர்ஷாத், சிராக், சதானந்தா மற்றும் கிஷோர் ஆகியோருடன் சூரஜிற்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கைதைத் தொடர்ந்து, டேவிட் டிசோஜா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.