
டெல்லி: பிப்ரவரி 14- பொன்னியின் செல்வன் – II’ திரைப்படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீர’ பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காப்பியடித்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏஆர் ரஹ்மான் (AR Rahman) ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று இன்று அதிரடியாக உத்தரவிட்டது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் – II’ திரைப்படம்வெளியானது. இந்ததிரைப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.இந்த திரைப்படத்தில் வீர ராஜா வீர’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடல் காப்பியடிக்கப்பட்டதாக பத்மஸ்ரீ விருது பெற்ற துருபத் இசைக்கலைஞர் பையாஸ் வாசிபுதீன் தாகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனது தந்தை நீசர் பயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் உருவாக்கிய சிவ ஸ்துதி’ பாடல் மெட்டில் ‛வீர ராஜா வீர’ பாடல் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறியிருந்தார்.மேல்முறையீடு அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு 2025 ஏப்ரல் 25ல் ஏஆர் ரஹ்மான் அந்த பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும். ரூ.2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.ஏஆர் ரஹ்மான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மான்வி சிங்வி வாதாடினார். அப்போது அவர், இந்த பாடல் 1991ல் பலரால் பாடப்பட்டுள்ளது. அப்போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இப்போது மட்டும் ஆட்சேபனை தெரிவிக்கிறார்’’ என்று வாதிட்டார். ரூ.2 கோடி செலுத்த உத்தரவு பையாஸ் வாசுபுதீன் தாகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாங்கள் மெட்டுக்கு உரிமை கோரவில்லை. எனது தந்தை உருவாக்கிய குறிப்பிட்ட இசைக்கு மட்டுமே உரிமை கோருகிறோம்’’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


















