Home மாவட்டங்கள் பெங்களூர் காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்தில் இல்லை; அமைச்சர் ராஜ்மோகன்

காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்தில் இல்லை; அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: ஆக. 18-
காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது; காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்ட எம்எல்ஏ எ.வ.வேலு பேசினார். இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன் பதில் அளித்து பேசினர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு கருத்துக்களை இங்கே வழங்கும் போது பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் , நாங்கள் இதை செய்தோம், இதை செய்தோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறாரே தவிர, மேடைப் பேச்சு அல்ல; கருத்துக்கள் வழங்க வேண்டியது மானியக்கோரிக்கை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்” என்றார்.
இதற்கிடையே சட்டசபையில் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்ற அவசியம் என்ன என எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். இதன் பிறகு அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: கருணாநிதியை நாங்கள் மதிக்கிறோம்.
நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் கூட அவர் பெயரை சொல்லிய போது, எழுந்து நின்று தாய் உள்ளத்தோடு அதற்காக வருத்தம் தெரிவித்த மனிதர் இங்கே அமர்ந்து கொண்டு இருக்கிறார்; இங்கே பேசும் போது திமுக உறுப்பினர் இந்த மைக், டெபிள் செய்தது நாங்கள் தான் என்று சொல்கிறார்; இது மக்கள் வரி பணத்தில் தமிழக அரசால் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.திட்டங்கள் பெயர் மாற்றம் குறித்து பல உறுப்பினர் பலமுறை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். பெயர் மாற்றம் என்பது காலம் காலமாக நடப்பது; அம்மா பசுமை இல்லம், கருணாநிதி கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறி இருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளிக் ஆக மாறி இருக்கிறது.இங்கே 10 இடங்களுக்கு போய் செல்வம் சேர்த்து வருகிறேன்; நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு என்று கூறி தமிழகத்தின் கல்வி கண் திறந்தவர் காமராஜர் பெயர் தான் காலை உணவு திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 232 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.