
வாஷிங்டன், ஜன. 20- கிரீன்லாந்து பகுதியை வாங்கப் போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தச் சூழலில் திடீரென அமெரிக்கா- கனடாவின் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கமாண்ட், அதாவது நோராட் விமானங்கள் இப்போது கிரீன்லாந்திற்கு செல்கிறது. அமெரிக்க அதிபரான டிரம்ப் கிரீன்லாந்தை வாங்கப் போவதாகச் சொல்லி வருகிறார். கிரீன்லாந்தை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்படி ஒப்படைக்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை கூட எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். டிரம்ப்பின் இந்தப் பேச்சுகள் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்தச் சூழலில் NORAD எனப்படும் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கமாண்ட் விமானத்தை கிரீன்லாந்திற்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அந்த விமானம் கிரீன்லாந்தில் உள்ள பிடூஃபிக் விண்வெளி தளத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. டிரம்பின் தடாலடி பேச்சுகளுக்கு மத்தியில் அமெரிக்க- கனடா நாடுகளின் போர் விமானம் கிரீன்லாந்துக்குச் சென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

















