
புதுடெல்லி, ஜன. 22- மேகாலயா, திரிபுரா, மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் வளர்ச்சிக்கு மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களின் திறமையான மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மக்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இந்த மாநிலங்களின் மக்கள் வளமான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.














