குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை

சென்னை: ஜூலை 12-
பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.
இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் கைவிடப்​பட்ட நிலை​யில் கண்​டறியப்​படும் குழந்​தைகள், மற்​றவர்​களால் கொண்டு வந்து ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகள் குறித்து சட்​ட​வி​தி​களின்​படி தகவல்​கள் அளிக்​கப்​படு​வ​தில்​லை.அந்த குழந்​தைகளை உரிய விதி​களுக்கு உட்​ப​டா​மல் தத்​தெடுக்​கும் சம்​பவங்​கள் நடக்​கிறது என்று மத்​திய பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் சமீபத்​தில் தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்கு கடிதம் எழு​தி​யிருந்​தது.எந்த ஒரு தனி நபருக்​கோ, நிறு​வனத்​துக்​கோ, மருத்​து​வ​மனைக்கோ கைவிடப்​பட்ட நிலை​யில் ஆதர​வற்ற குழந்​தைகள் இருப்​பது தெரிய​வந்​தால், அதுகுறித்து குழந்​தைகள் உதவி மையம் (1098), குழந்​தைகள் நலக்​குழு, மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடி​யாக தகவல் தெரி​விப்​பது கட்​டா​யம் ஆகும்.
அதே​போல், தங்​களது குழந்​தையை வளர்க்க இயலாமல், ஒப்​படைக்க பெற்​றோர் முன்​வந்​தால், அதுகுறித்து மருத்​து​வமனை நிர்​வாகம் குழந்​தைகள் நலகுழு​வுக்கு தகவலளிக்க வேண்​டும்.
குழந்​தைகளை முறைப்​படி தத்​தெடுக்க உரிய பதிவு செய்​வது அவசி​யம் ஆகும். ஆவணங்​களின்​படி​யும், பதிவு மூப்பு அடிப்​படை​யிலும் அவர்​களுக்கு குழந்​தைகள் தத்து கொடுக்​கப்​படும். இந்த விதி​களை மீறி தன்​னிச்​சை​யாக குழந்​தைகளை தத்​தெடுப்​பது சட்​டப்​படி குற்​றம் ஆகும்.