பாட்னா, ஜூலை 8- பா.ஜ., பிரமுகரும், தொழிலதிபருமான கோபால் கெம்கா படுகொலையில் தொடர்புடைய நபரை பாட்னா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. பா.ஜ., பிரமுகரான இவர் பெரும் தொழிலதிபர்.கடந்த சில நாட்கள் முன்பு தமது வீட்டின் முன்பு கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பீஹாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
கெம்கா கொலையில் தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 12க்கும் அதிகமானவர்களை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர்.















