கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் சட்ட உதவிகள்

புதுடில்லி, ஜூலை 23- ‘’கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. நாங்கள் சட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்’’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.ஏமனில் கேரள நர்ஸ்க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள நர்ஸ் நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. நாங்கள் சட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். நிமிஷா பிரியா குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். மேலும் பிரச்னையைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். சில நட்பு அரசாங்கங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேசி ஒரு தீர்வை எட்டுவதற்கு பிரியாவின் குடும்பத்தினருக்கு அதிக நேரம் ஒதுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.