கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் திட்டம்

சென்னை: ஜூலை 23 –
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பலனை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?
இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அதேபோல, எல்பிஜி சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் வழங்கப்படும்
விபத்துக் காப்பீட்டினை பெறுவதற்கான முறைகள் என்னென்ன தெரியுமா பெண்கள் பெறக்கூடிய திட்டமான, உஜ்வாலா திட்டத்திற்கு, அளிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம். இந்தியாவில்
பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏராளமான நலத்திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான், “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டமாகும்.. இதன்மூலம்,
பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக
வழங்குகிறது. மத்திய அரசு 2016ல் இந்த திட்டத்தை ஆரம்பித்ததுடன், இத்திட்டத்தை பெறுவதற்கான சில தகுதிகளையும், அளவுகோல்களையும் நிர்ணயித்து.. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் பலனை கோடானு கோடி பேர் பெற்று வருகிறார்கள்.