கொரியாவை அதிகம் நேசித்தோம்: தற்கொலை சகோதரிகள் டைரியில் தகவல்

காசியாபாத்: பிப்ரவரி 6-
குடும்பத்தை விட கொரியா மற்றும் அதன் கலாச்சாரத்தை தான் அதிகம் நேசித்தோம் என ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள் டைரியில் 8 பக்கத்துக்கு குறிப்பு எழுதி வைத்துள்ளனர்.
உத்தர பிரதேசம் காசி​யா​பாத்​தைச் சேர்ந்த 3 சகோ​தரி​கள் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்​லைன் விளை​யாட்​டுக்கு அடிமை​யாகினர்.
இதிலிருந்து இவர்​களை இவர்​களது பெற்​றோ​ரால் மீட்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் இவர்​கள் 2 நாட்​களுக்கு முன் தங்​கள் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் 9-வது தளத்​தில் இருந்து குதித்து தற்​கொலை செய்து கொண்​டனர். ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி, அதில் இறுதியாக விடுக்கப்படும் சவால் அடிப்படையில் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. போலீஸ் விசா​ரணை​யில் சகோ​தரி​கள் டைரி​யில் 8 பக்​கத்​துக்கு எழுதி வைத்த குறிப்பு கிடைத்​துள்​ளது.
அதில் சகோ​தரி​கள் கூறி​யிருப்​ப​தாவது: நாங்​கள் கொரியாக்காரர்​கள். எங்​களுக்கு கொரியா பாப் இசை​தான் பிடிக்​கும். நீங்​கள் இந்​தி​யர்​கள் உங்​களுக்கு பாலிவுட்​தான் பிடிக்கும்.
நாங்​கள் கொரி​யாவை எங்கள் குடும்​பத்தை விட அதிகம் நேசிக்​கிறாம். எங்​களுக்கு கொரியா, தாய்​லாந்​து, அமெரிக்​கா, லண்​டன் மற்​றும் ஜப்​பான் நடிகர்​கள் மற்​றும் பொழுது​போக்கு நிகழ்ச்​சிகள் ​தான் பிடிக்​கின்​றன. எங்​களுக்கு ‘டோபி ஸ்டுடியோ விளை​யாட்​டு, ஈவில் நன் விளை​யாட்டு மற்​றும் ஐஸ்​கிரீம் மேன் ஆகிய விளை​யாட்​டு​கள்​தான் பிடிக்​கும். கொரி​யாக்​காரர்​கள் மற்​றும் கொரியா பாப் இசை​ தான் எங்​கள் வாழ்க்​கை. நாங்​கள் எங்​கள் சகோ​தரனுக்​கும் கொரியா கதா​பாத்​திரங்​களான லெனோ மற்​றும் குயினா பற்றி எடுத்​துக்கூறினோம்.
ஆனால் அம்​மா, அவனுக்கு கொரியா கலாச்​சா​ரத்தை கற்​றுக்​கொடுக்க வேண்​டாம் என்​பார். இது எங்​களுக்கு வருத்​த​மாக இருந்தது. இதனால் நாங்​கள் எங்​கள் சகோ​தரனை எதிரி​யாக கருதினோம். இவ்​வாறு அதில் கூறியுள்​ளனர்