Home செய்திகள் தேசிய செய்திகள் கொல்​கத்தா சேமிப்பு கிடங்கு விபத்து – உயி​ரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

கொல்​கத்தா சேமிப்பு கிடங்கு விபத்து – உயி​ரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

கொல்​கத்தா: ஜூன் 26-
கொல்​கத்தா தரதலா பகு​தி​யில் பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலை​யம் அருகே சேமிப்பு கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மேற்​கு ​வங்​கம் கொல்​கத்​தா​வில் தரதலா பகு​தி​யில் பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலை​யம் அருகே கட்​டப்​பட்டு வந்த 3 அடுக்கு சேமிப்பு கிடங்கு நேற்று முன்​தினம் இடிந்து தரைமட்​ட​மானது. இந்த இடி​பாடு​களில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 10 ஆக உயர்ந்​துள்​ளது. நேற்று காலை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதால், மீட்​கப்​பட்​ட​வர்​களின் எண்​ணிக்கை 30 ஆக உயர்ந்​துள்​ளது.
இவர்​களில் 19 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறுகின்​றனர். இடி​பாடு​களில் வேறு யாரும் சிக்​கி​யுள்​ளனரா என்​பதை கண்டறியும் ராணுவத்​தின் ஜிபிஆர் ரேடார் உதவி​யுடன் தேடும் பணி நடை​பெறுகிறது. இது கான்​கிரீட் இடி​பாடு​களுக்கு உள்​ளும் மனிதர்​களின் நடமாட்​டம், நாடித் துடிப்பு ஆகிய​வற்றை கண்டறியும். இடி​பாடு​களுக்​குள் கேம​ராக்​களை நுழைத்து தேடும் பணி நடை​பெறுகிறது.
செல்​போன் டவர் தரவு​கள் மூல​மாக​வும், இடி​பாடு​களுக்​குள் யாருடைய செல்​போனும் செயல்​பாட்டு நிலை​யில் உள்​ளதா என்பதும் கண்​டறியப்​படு​கிறது. இது தொடர்​பாக 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் மீது மரணத்தை ஏற்​படுத்​திய குற்றத்​திற்​காக கொல்​கத்தா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரூ.2 லட்​சம் நிவாரணம்: சேமிப்பு கிடங்கு விபத்​தில் உயிரிழந்தவர்களின் குடும்​பங்​களுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்ள பிரதமர் மோடி, அவர்​களது குடும்​பத்​தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.2 லட்​ச​மும், கா​யம் அடைந்​தோர் குடும்​பத்​தினருக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.