
ராம்கர்: ஜூன் 26-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் வாகனம் – டிரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.ராம்கர் – பொகாரோ சாலையில் உள்ள லாரி என்ற பகுதியில், நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் பயணிகள் வாகனமும், டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. தாஷா பார்ட்டி என்ற இசைக்குழுவினர் சென்ற அந்த வாகனத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, ராம்கர் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரங்மர்ச்சா பகுதியைச் சேர்ந்தவர்கள் என ராம்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நள்ளிரவு 12 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


















