Home செய்திகள் தேசிய செய்திகள் சஞ்சய் குமார் அகர்வால் புதிய தலைமை நீதிபதி

சஞ்சய் குமார் அகர்வால் புதிய தலைமை நீதிபதி

புதுடெல்லி, செப். 6: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சஞ்சய் குமார் அகர்வால், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். அவரை நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரைத்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது நீதிபதி சந்தீப் மேத்தா எழுப்பிய குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்துக்கு எழுதிய கடிதத்தில், சர்மா பதவியை தவறாக பயன்படுத்தி வசதி படைத்த மனுதாரர்களுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கியதாக குற்றம்சாட்டினார். மேலும், சில வழக்கறிஞர்களும் சர்மா மீது புகார்களை சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக, வழக்கறிஞர்களாக முறைப்படி பணியாற்றாத நான்கு பெண் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது