சட்டசபை தேர்​தலுக்கு தயா​ராகுங்​கள்” – உ.பி. நிர்​வாகி​களுக்கு நிதின் நவீன் கட்டளை

மதுரா: ஜனவரி 26 –
பாஜக தேசி​யத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற நிதின் நவீன் முதன்​முறை​யாக நேற்று உத்தர பிரதேச மாநிலத்​துக்கு சென்​றார்.அவருக்​கு, அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் மற்​றும் பாஜக தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மதுரா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் மனதின் குரல் நிகழ்ச்​சியை கேட்​ப​தற்​காக கூடி​யிருந்த பாஜக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் மத்​தி​யில் நிதின் நவீன் பேசி​ய​தாவது:உத்தர பிரதேசத்தில் 2027 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்கி வரு​கிறது. இதற்​காக கட்சி நிர்​வாகி​கள் இப்​போது முதல் தயா​ராக வேண்​டும். தேர்​தல் வரும்​போது மட்​டும் வெளியே வரும் சில சக்​தி​கள், நாட்​டைப் பிரிக்​க​வும், அரசி​யலமைப்​பைச் சீர்​குலைக்​க​வும் முயற்​சிக்​கின்​றன.அரசி​யலமைப்​பைப் பற்றி இப்​போது பேசுபவர்​கள்​தான், முன்பு அதனைச் சிதைத்​தவர்​கள். அராஜக​வா​தி​களுக்​குத் துணை நின்ற அவர்​கள் இப்​போதும் சுற்​றித் திரி​கிறார்​கள். அவர்​களை முறியடிக்க ஒவ்​வொரு வாக்​குச் சாவடியை​யும் பலப்​படுத்த வேண்​டும். 2027 தேர்​தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும். இங்கு முதல்​வ​ராக பொறுப்​பேற்ற யோகி ஆதித்​ய​நாத், மாநிலத்தை ‘உத்தம பிரதேச​மாக’ மாற்​றி​யுள்​ளார். இவ்வாறு அவர் பேசினார்.