சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

ராய்ப்பூர்: ஜூலை 28 –
சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்கள் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த சனிக்கிழமை காலை கும்லா பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்​போது தடை செய்​யப்​பட்ட ஜார்​க்கண்ட் ஜன் முக்தி பரிஷத் (ஜேஜேஎம்​பி) பிரி​வினை​வாத அமைப்பை சேர்ந்த மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். அதற்கு பாது​காப்​புப் படை​யினர் பதில் தாக்​குதல் நடத்​தினர். இதில் ஜேஜேஎம்பி அமைப்பை சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்​தனர்.
அதே​போல் சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தார் மண்​டலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் உள்ள அடர்ந்த வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினருக்​கும் மாவோ​யிஸ்ட்​களுக்​கும் இடை​யில் பலத்த துப்​பாக்​கிச் சண்டை நடை​பெற்​றது. இந்த என்​க​வுன்ட்​டரில் 4 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர்.
இதுகுறித்து ஜார்க்​கண்ட் போலீஸ் அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘லா​வாடேக் வனப் பகு​தி​யில் சனிக்​கிழமை காலை 10 மணிக்கு மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். காக்ரா போலீஸ் நிலைய எல்​லைக்​குள் நடந்த அந்த சண்​டை​யில் 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்து ஏகே-47 ரக துப்​பாக்​கி, துப்​பாக்​கி​கள் மற்​றும் வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. தப்​பியோடிய 2 மாவோ​யிஸ்ட்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது’’ என்​றனர். சத்​தீஸ்​கரில் நடந்த என்​க​வுன்ட்​டர் குறித்து பஸ்​தார் மண்டல ஐஜிபி பி சுந்​தர்​ராஜ் கூறும்​போது, ‘‘என்​க​வுன்ட்​டர் நடந்த இடத்​தில் இருந்து இது​வரை 4 மாவோ​யிஸ்ட்​கள் உடல்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. அங்​கிருந்​து ஏ​ராள​மான ஆயுதங்​களும்​ கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன. இறந்​தவர்​களை அடை​யாளம்​ ​காணும்​ பணி நடை​பெறுகிறது’’ என்​றார்​.