
பெங்களூர், ஜூன் 11-
பழங்கள் மற்றும் காய்கறிகளில் வியக்கத்தக்க வகையில் கலைநயமிக்க சிற்பங்களை செதுக்கி, சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கலைஞர் புனீத்.
ஜெர்மனியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற கியூலினரி ஒலிம்பிக்ஸ்-2024 போட்டியில், பழங்களில் அற்புதம் நிகழ்த்தி இவர் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் பெருமையையும் சர்வதேச அரங்கில் உயர்த்தியுள்ளார்.
இந்நிலையில், சாதனை இளைஞர் புனீத் இன்று டாக்டர் யதீந்திர சித்தராமையா அவர்களை நேரில் சந்தித்து, தான் செதுக்கிய மிக அழகான பழ சிற்பம் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார்.
புனீத்தின் அசாத்திய திறமை, கடின உழைப்பு மற்றும் கலை மீதான அர்ப்பணிப்பைப் பாராட்டிய டாக்டர் யதீந்திர சித்தராமையா, அவருக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்மேலும், இந்தத் தனித்துவமான கலை மென்மேலும் வளரவும், கலைஞர்களை ஊக்குவிக்கவும் கர்நாடக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும், முழு ஆதரவும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.


















