சீனாவின் அடுத்த அதிபர் யார்?

பெய்ஜிங்: ஜூலை 8-
சீன அதிபராக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் பொதுவெளியில் அதிகம் வருவது இல்லை. சீனாவில் அதிபராக இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு. இதனால் ஜி ஜின்பிங் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய அதிபராக யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஜி ஜின்பிங் முதுகில் குத்திய ஜாங் யூக்ஸியா மற்றும் வாங் யாங் ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளனர். இவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். சீன அதிபராக 3வது முறையாக ஜி ஜின்பிங் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2012, 2018, 2023 என தொடர்ந்து சீன அதிபராக அவர் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது. ஏனென்றால் சீன அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும் சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது.தற்போது ஜி ஜின்பிங் ஓரம்கட்டப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஜி ஜின்பிங் திடீரென்று மாயமானார். சீனாவில் அதிபர் திடீரென்று மாயமானால் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பது வரலாறாக உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிறகே புதிய அதிபர்கள் தேர்வாகினர். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் அதிபர் பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சீனாவில் நடக்கும் செயல்கள் ஜி ஜின்பிங்கை ஓரம்கட்டும் வகையிலேயே உள்ளன. இதனால் விரைவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.