சீனாவுடன் பஞ்ச சீல ஒப்பந்தத்தை நேரு விரும்பியது ஏன்?

புதுடெல்லி, பிப். 14- உத்​த​ரா​காண்ட் மாநிலம் டேராடூனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முப்​படை தலைமை தளபதி அனில் சவு​கான் கூறிய​தாவது: திபெத்தை சீனா​வின் ஒரு பகு​தி​யாக இந்​தியா அங்​கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு பஞ்ச சீல ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டது. இதில் நாட்​டின் முதல் பிரதமர் நேரு​வும், சீன பிரதமர் ஜோ என்​லா​யும் கையெழுத்​திட்​டனர். இந்​தியா வடக்கு எல்​லைப் பிரச்​சினையை ஒரு முறை​யான ஒப்​பந்​தத்​தின் மூலம் தீர்த்​துக்​கொள்​ளலாம் என்று கரு​தியே பஞ்ச சீல ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டது. ஆனால் இந்த ஒப்​பந்​தம் வர்த்​தகத்​துக்கு மட்​டும்​தான். எல்​லைப் பிரச்​சினைக்கு அல்ல என்​பது சீனா​வின் நிலைப்​பா​டாக உள்​ளது. அதனால்​தான் இன்று வரை இந்​தியா – சீனா இடையே​யான எல்​லைக் கட்​டுப்​பாட்டு பகுதி பிரச்​சினை​யாகவே உள்​ளது.இந்​தி​யாவை விட்டு ஆங்​கிலேயர்​கள் வெளி​யேறிய பின் நமது எல்லை எங்​குள்​ளது என்​பதை இந்​தியா தீர்​மானிக்க வேண்​டும். கிழக்கு பகு​தி​யில் பிரிட்​டிஷ் இந்​தியா -திபெத் இடையே 890 கி.மீ தூரம் மெக்​மஹோன் எல்லை இருப்​பது நேரு​வுக்கு தெரிந்​திருக்​கலாம். லடாக் பகு​தி​யில் நமக்கு ஏதோ ஒரு உரிமை கோரல் இருந்​ததும் அவருக்​குத் தெரிந்​திருக்​கலாம். அதனால்​ அவர் பஞ்​சசீல ஒப்​பந்​தத்தை மேற்​கொள்ள விரும்​பி​யிருக்​கலாம். சீனா கடந்த 1949-ல் சுதந்​திரம் பெற்​றவுடன், அது பிரிட்​டிஷாரிட​மிருந்து பெற்ற சிறப்​புச் சலுகைகளை விட்​டுக்​கொடுத்​ததுடன், அந்​நிய நாட்​டுப் பகு​தி​களுக்​கான கோரிக்​கைகளை​யும் முன்​வைக்​க​வில்​லை. திபெத் உரு​வான பின் இப்​பகு​தி​யில் நிலைத்​தன்​மையை சீனா விரும்​பியது. இதனால் இப்​பகுதி முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக கருதப்​படு​கிறது. இவ்​வாறு ஜெனரல்​ அனில்​ சவு​கான்​ கூறினார். பஞ்ச சீலம் என்ற வடமொழி சொல்​லுக்கு ஐந்து வகை​யான ஒழுக்​கம் என அர்த்​தம். பஞ்ச சீலம் என்​பது புத்​தமதத்​தின் அடிப்​படை கோட்​பாடு. ஒரு நாட்​டின் தனித்​துவ கவுர​வத்​தை​யும், அரசாங்க அதி​காரத்​தை​யும் மற்ற நாடு​கள் மதிக்க வேண்​டும். இரண்டு நாடு​களின் கொள்கை வேறு​பட்​ட​வை​யாக இருந்​தா​லும், சமா​தான​மாக வாழ​வேண்​டும் என்று முடிவானது.