சுவர் சரிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு

திருவண்ணாமலை: பிப்ரவரி 14-வந்தவாசி அருகே வீடு சீரமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, சுவர் சரிந்து விழுந்​த​தில் இடி​பாடு​களில் சிக்கி 2 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்தவாசி அடுத்த வழு​வூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மோகன். தொழிலா​ளி.
இவரது மனைவி பவானி, மகன்​கள் அபினேஷ்(16), முகேஷ்(15). வந்தவாசி அரசு ஆண்​கள் மேல்​நிலை பள்​ளி​யில் அபினேஷ் பிளஸ்​-1, முகேஷ் 10-ம் வகுப்பு படித்து வந்​தனர்.மாணவர்​கள் இரு​வரும் வந்தவாசி அடுத்த இளங்​காடு கிராமத்​தில் உள்ள தாத்தா முனியன் வீட்​டில் தங்​கி, பள்​ளிக்​குச் சென்று படித்து வந்​துள்​ளனர். முனியன் அரசு தொகுப்பு வீட்​டில் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில், நேற்று அவரது வீட்டை சீரமைப்​ப​தற்​காக வீட்டை இடிக்​கும் பணி​யில் அபினேஷ், முகேஷ் மற்​றும் உறவினர் மகன் ஸ்ரீராம் உள்​ளிட்​டோர் ஈடு​பட்டு வந்​துள்​ளனர்.அப்​போது, வீட்​டின் சுவர் இடிக்​கும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த சகோ​தரர்​கள் அபினேஷ், முகேஷ் ஆகியோர் மீது எதிர்​பா​ராத​வித​மாக சுவர் சரிந்து விழுந்​தது.இதில் இடி​பாடு​களில் சிக்​கிய இரு​வரும் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். காயமடைந்த ஸ்ரீராம் (11) மீட்ட அக்​கம்​பக்​கத்​தினர், வந்தவாசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர்.தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்​கள் மற்​றும் போலீ​ஸார், இடி​பாடு​களில் சிக்​கி​யிருந்த அபினேஷ், முகேஷ் ஆகியோரது உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக வந்தவாசி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விபத்து தொடர்​பாக பொன்​னூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.
ரூ.3 லட்​சம் நிவாரணம்: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “கட்​டிட இடி​பாடு​களில் சிக்கி உயி​ரிழந்த அபினேஷ், முகேஷ் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல். காயமடைந்த ஸ்ரீரா​முக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.உயி​ரிழந்​தவர்​களின் பெற்​றோருக்கு தலா ரூ.3 லட்​சம், காயமடைந்​தவருக்கு ரூ.50 ஆயிரத்தை முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.