
சென்னை: ஜனவரி 17-
காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.. அந்தவகையில் சென்னையில் மட்டும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது காணும் பொங்கல்… இதை முன்னிட்டு, சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரினாவில் குவியும் மக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அருண் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை மூன்று தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள ஏழு சேவைச் சாலைகளின் நுழைவுவாயில்களில் காவல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. மெரினாவில் குவியும் மக்கள் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அருண் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1,500 ஊர்க்காவல் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















