Home செய்திகள் தேசிய செய்திகள் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு

ஹைதராபாத், ஜூலை 8- ஹை​தா​ரா​பாத்​தில் சொத்​துக் குவிப்பு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட போலீஸ் அதி​காரி ஒரு​வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டதை தொடர்ந்து சஞ்​சல்​கூடா மத்​திய சிறை​யில் அவர் அடைக்​கப்​பட்​டார். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தில் போலீஸ் கம்ப்​யூட்​டர் சர்​வீசஸ் (பிசிஎஸ்) துறை​யில் டிஎஸ்​பி​யாக பணி​யாற்றி வந்​தவர் சங்​கிரெட்டி பீம்​ரெட்​டி. இவர் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்துகளை குவித்​துள்​ள​தாக புகார்​கள் எழுந்​தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்​புத்​ துறை அதி​காரி​கள் கடந்த 2ம் தேதி இப்​ரஹிம்​பட்​டினத்​தில் உள்ள டிஎஸ்பி பீம்​ரெட்​டி​யின் வீடு மற்​றும் அவருக்கு தொடர்​புடைய 15 இடங்​களில் அதிரடி சோதனை நடத்தினர். கர்​நாட​கா​விலும் உறவினர்​கள், நண்​பர்​கள் வீடு​களில் சோதனை நடை​பெற்​றது. இதில் டிஎஸ்பி பீம்​ரெட்டி ரூ.200 கோடிக்கு மேல் அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை குவித்​திருப்​பது தெரிய​வந்​தது. சோதனை​யில் 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்​ளிப் பொருட்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றினர். ஹைத​ரா​பாத் இப்​ரஹிம்​பட்​டினத்​தில் ஒரு பங்​களா, டெலி​காம் நகரில் 2 மாடி கட்​டிடம், தெல்​லாபூரில் 2 வீடு​கள், சங்​காரெட்டி மாவட்​டம், ஜகீ​ரா​பாத்​தில் 3.5 ஏக்​கர் விவ​சாய நிலம், கர்நாடகாவில் 45 ஏக்​கர் நிலம், விகா​ரா​பாத்​தில் 1000 சதுர அடியில் வீட்டுமனை மற்​றும் 2 ஏக்​கர் விவ​சாய நிலம், ராகவேந்திரா ராக் அண்ட் சாண்ட் மினரல்ஸ் நிறு​வனத்​தில் ரூ.75 லட்​சத்​தில் பங்கு என பல்​வேறு சொத்​துகளை​யும் ரூ.3.60 லட்​சம் ரொக்​கம் மற்​றும் வங்கி டெபாசிட் ரூ.19.91 லட்​சத்​தை​யும் லஞ்ச ஒழிப்பு துறை அதி​காரி​கள் முடக்​கினர். சோதனை​யின்போது, டிஎஸ்பி வீட்​டில் ஒரு டைரி கிடைத்​தது. அதில் அவர் தனது சொத்து விவரம் முழு​வதை​யும் எழுதி வைத்திருந்​தார். அதை வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அதி​காரி​கள் அவரின் அனைத்து சொத்​துகளை​யும் முடக்​கி​யுள்​ளனர்.இதையடுத்து கைது செய்​யப்​பட்ட டிஎஸ்டி பீம்​ரெட்​டியை நேற்று முன்​தினம் இரவு நீதிபதி முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தினர். அவரை 14 நாட்​கள் நீதி​மன்ற காவலில் வைக்​கும்​படி நீதிபதி உத்தர​விட்​டதை தொடர்ந்து ஹைத​ரா​பாத் சஞ்​சல்​கூ​டா சிறையில்​ அவர்​ அடைக்​கப்​பட்​டார்.