புதுடெல்லி: ஜனவரி 22 –
குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள அம்ரித் உத்யான் (முகல் தோட்டம்) பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி (கடைசி அனுமதி மாலை 5.15 மணி) வரை இந்த தோட்டத்தைப் பார்வையிடலாம்.பராமரிப்புப் பணிகளுக்காக வாரந்தோறும் திங்கட்கிழமையும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும். தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.













