ஜவுளி துறைக்கு வங்​கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்​கும்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: பிப்ரவரி 13-
அமெரிக்க பருத்தி மற்​றும் நூலை பயன்​படுத்தி தயாரிக்​கப்​படும் ஜவுளிக்கு வங்​கதேசம் பெறும் சலுகை இந்​தி​யா​வுக்​கும் கிடைக்​கும் என மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் கூறி​யுள்​ளார். வர்த்தக ஒப்​பந்​தத்​தில் அமெரிக்​கா​விடம் இந்​தியா ஒட்​டுமொத்​த​மாக சரணடைந்​துள்​ளது, விவ​சா​யிகளின் நலன்​கள் விஷ​யத்​தில் இந்​தியா சமரசரம் செய்​துள்​ளது என மக்​களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​னார்.
இதுகுறித்து மத்​திய வர்த்தக மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் அளித்த பேட்​டியில் கூறி​யிருப்​ப​தாவது: வங்​கதேசப் பொருட்​களுக்​கான பரஸ்பர வரியை 19 சதவீத​மாக அமெரிக்கா குறைக்​கிறது. ஆனால், அமெரிக்க பருத்தி மற்​றும் நூலைக் கொண்டு தயாரிக்​கப்​படும் ஆடைகளுக்கு மட்​டும் அமெரிக்கா பரஸ்பர வரி​யில் முழு விலக்கு அளிக்​கிறது.வங்​கதேச ஆடைக்கு அமெரிக்கா​வில் 31 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. ஆனால் அமெரிக்க பருத்தி மற்​றும் நூலில் ஆடைகளை தயாரித்து அனுப்​பி​னால் 19 சதவீத பரஸ்பர வரி​யில் விலக்கு அளிக்​கப்​பட்​டு, நட்பு நாடு​களுக்கு விதிக்​கப்​படும் 12 சதவீத வரிமட்​டுமே விதிக்​கப்​படும்.ஜவுளியை பொருத்​தவரை வங்​கதேசத்​துக்கு அமெரிக்கா வழங்​கும் சலுகை இந்​தி​யா​வுக்​கும் கிடைக்​கும். இந்​திய நிறு​வன​மும் அமெரிக்க பருத்தி மற்​றும் நூலில் ஆடை தயாரித்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​தால், பரஸ்பர வரி விதிக்​கப்​ப​டாது. அமெரிக்கா – வங்​கதேச வர்த்தக ஒப்​பந்​தத்​தில் உள்ள விதிமுறை, இந்​தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்​பந்​தத்​தி​லும் இருக்​கும்.
இதனால் இந்​தி​யா​வில் பருத்தி உற்​பத்தி செய்​யும் விவசாயிகளுக்கு எந்த பாதிப்​பும் இல்​லை. அமெரிக்காவில் குறிப்​பிட்ட அளவு​தான் பருத்தி உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. அதன் ஏற்​றுமதி 5 மில்​லியன் டாலர் மட்டுமே. ஆனால்
இந்​தி​யா​வுக்கு இதன் இலக்கு 50 பில்​லியன் டாலர். வர்த்தக ஒப்​பந்​தத்​தின் முதல் கட்​டத்தை இந்​தி​யா​வும் – அமெரிக்காவும் இறுதி செய்​துள்​ளன. இது மார்ச் மாதம் அமல்​படுத்​தப்​படலாம். இவ்வாறு பியூஷ் கோயல்​ கூறினார்​.