ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: ஜூலை 1 –
நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் படிப்படியாக
அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாட்டின் நிதிநிலவரம் வலுவடைந்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்ட வரிதாரர்கள் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 1.51 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2024-25 நிதி​யாண்​டில் ஒட்​டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. 2020-21 நிதி​யாண்​டில் ரூ.11.37 லட்​சம் கோடி​யாக இருந்த வசூல், 5 ஆண்​டில் இரட்​டிப்​பாகி உள்​ளது.கடந்த 2023-24 நிதி​யாண்​டில் வசூலான ரூ.20.18 லட்​சம் கோடி​யுடன் ஒப்​பிடும்​போது, 2024-25-ல் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதி​கரித்​துள்​ளது. இந்த ஆண்​டில் சராசரி​யாக மாதந்​தோறும் ரூ.1.84 லட்​சம் கோடி வசூலாகி உள்​ளது.
முந்​தைய நிதி​யாண்​டில் சராசரி மாதாந்​திர வசூல் ரூ.1.68 லட்​சம் கோடி​யாக இருந்​தது. கடந்த ஏப்​ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி​யாக உயர்ந்​தது. இது இது​வரை இல்​லாத அதி​கபட்ச ஒரு மாத வரி வசூல்​ ஆகும்​.