Home விளையாட்டு ஜோ ரூட் 99* ரன்கள் விளாசல்: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து

ஜோ ரூட் 99* ரன்கள் விளாசல்: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து

கார்டிஃப், ஜூலை 18- இங்கிலாந்து – இந்தியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று முன்​தினம் கார்​டிஃப் நகரில் உள்ள சோபியா கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இந்​திய அணி 44 ஓவர்​களில் 233 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஸ்ரேயஸ் ஐயர் 66, விராட் கோலி 65 ரன்​கள் சேர்த்​தனர். ஒரு கட்​டத்​தில் இந்​திய அணி 31.3 ஓவர்களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 178 ரன்​கள் சேர்த்து வலுவாக இருந்​தது.அதன் பின்​னர் மேற்​கொண்டு 55 ரன்​கள் சேர்ப்​ப​தற்​குள் எஞ்​சிய 8 விக்​கெட்​களை​யும் கொத்​தாக தாரை வார்த்​தது. 234 ரன்​கள் இலக்குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 44.1 ஓவர்​களில் 6 விக்கெட்​கள் இழப்​புக்கு 235 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீரர்​களான பென் டக்​கெட் 0, ஜேக்​கப் பெத்​தேல் 4 ரன்களி​லும் நடையை கட்​டினர். 8 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ஜோ ரூட் நடு​வரிசை மற்​றும் பின்வரிசை வீரர்​களு​டன் இணைந்து பொறுமை​யாக விளை​யாடி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​னார். நிலைத்து நின்று விளை​யாடிய ஜோ ரூட் 133 பந்​துகளில், 9 பவுண்டரி​களு​டன் 99 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளையாடிய கேப்​டன் ஹாரி புரூக் 16, சேம் கரண் 26, ஜாஸ் பட்லர் 17, வில் ஜேக்ஸ் 30 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கஸ் அட்​கின்​சன் 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 23 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திய அணி தரப்​பில் குர்​னூர் பிரார் 2 விக்​கெட்​களை வீழ்த்தினார். ஜஸ்​பிரீத் பும்​ரா, பிரசித் கிருஷ்ணா, ஷிவம் துபே, அக்​சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். ஆட்ட நாயக​னாக ஜோ ரூட் தேர்​வா​னார். 4 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்​கிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்​தது. முதல் ஒரு​நாள் போட்​டி​யில் இந்திய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒரு​நாள் போட்டி நாளை (19-ம் தேதி) லண்​டன் லார்ட்​ஸ் மைதானத்​தில்​ நடை​பெறுகிறது.