Home மாவட்டங்கள் பெங்களூர் டிக்கெட் இல்லாமல் பயணம்; ரயிலில் இனி ரூ.500 அபராதம்

டிக்கெட் இல்லாமல் பயணம்; ரயிலில் இனி ரூ.500 அபராதம்

சென்னை: ஜூன் 20-
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால், தற்போது வசூலிக்கப்படும் அபராதம் 250 ரூபாய், ஜூலை 1 முதல் 500 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும்.
நாடு முழுதும், 13,000 பயணியர் ரயில்களில், தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர், பயணம் செய்கின்றனர். ரயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, ரயில்வே சட்டம் 1989ன் படி, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது, இந்தத் தொகையை உயர்த்தி, ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம், டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அபராதத் தொகையை, 500 ரூபாயாக, ரயில்வே உயர்த்தி உள்ளது. இதை ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என, அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.