Home மாவட்டங்கள் பெங்களூர் கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் காயம்

கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி, மூவர் காயம்

பெங்களூரு, ஆக. 5: அதிவேகமாகச் சென்ற மஹிந்திரா தார் கார் கவிழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் மூவர் பலத்த காயமடைந்த சோகமான சம்பவம் நெலமங்கள தாலுகா, கம்பாளு கிராமத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்துள்ளது. நெலமங்களவைச் சேர்ந்த பவன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் நண்பரின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. காயமடைந்த மூவரை உள்ளூர்வாசிகளும் போலீசாரும் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த நிலையில், அதிக வேகமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தாபஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.