Home செய்திகள் உலக செய்திகள் டிரம்ப்பை ஏமாற்றிய இஸ்ரேல்? கச்சிதமாக காய் நகர்த்திய நெதன்யாகு

டிரம்ப்பை ஏமாற்றிய இஸ்ரேல்? கச்சிதமாக காய் நகர்த்திய நெதன்யாகு

வாஷிங்டன், ஜூலை 10- வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிடம் இருந்து அமெரிக்காவுக்கு போன உளவு தகவல் கவனம் பெற்றுள்ளது. அதாவது டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் உளவுத் தகவலை அனுப்பிய நிலையில், அதன் பிறகே அமெரிக்கா மீண்டும் தனது தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த மோதல் கடந்த மாதம் தான் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஆனால், அது சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஈரான் சதி இதற்கிடையே திரைமறைவில் நடந்த சில விஷயங்கள் குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி செய்து வருவதாக உளவு தகவலை இஸ்ரேல் தான் அமெரிக்காவுக்கு கொடுத்ததாம். இந்த புதிய தகவல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டிரம்ப்பை குறிவைத்து ஈரான் சில காய்களை நகர்த்தி வருவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது. கடந்த சில வாரங்களாகவே ஈரானின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை தகவல்களை சேகரித்து வந்தாலும், டிரம்ப்பை காலி செய்ய ஈரான் போட்ட சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை இஸ்ரேலிடமிருந்து வந்துள்ளது. நாம் இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அமெரிக்கா ஈரான் இடையேயான உறவு மேம்பட்டு வந்த நேரத்தில் இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை வந்தது. அதைத் தொடர்ந்தே அமெரிக்கா ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.இதனால் இஸ்ரேல் உளவுத் தகவல் உண்மையானது தானா என்ற கேள்வி அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஈரானை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேல் இதை செய்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. டிரம்ப்பிற்கு இந்த தகவலை அனுப்பி, அதன் மூலம் ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவதே இஸ்ரேலின் திட்டமாக இருந்தது என்ற கேள்வியும் எழுகிறது.