
நியூயார்க், ஜன. 21- உலகப்போர் போர், வர்த்தக போர் ஏற்படும் அச்சம் காரணமாக அமெரிக்க சந்தையில் ஒரே நாளில் சுமார் $1.4 டிரில்லியன் சந்தை மதிப்பு அழிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு₹1,40,000,00,000,000 ஆகும். அதாவது 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் அக்டோபருக்குப் பின் மிக மோசமான சரிவு பதிவாகி உள்ளது. இதன் விளைவாக, சுமார் $1.4 டிரில்லியன் சந்தை மதிப்பு சரிந்தது. அமெரிக்கா-ஐரோப்பா வர்த்தகப் பதட்டங்களும், கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் அதிபர் டிரம்பின் முயற்சியும், அது தொடர்பான வரி அச்சுறுத்தல்களும், கனடா – அமெரிக்கா இடையிலான போரும் இச்சரிவுக்கு முக்கியக் காரணங்களாயின. இதனால் பல மிடில் கிளாஸ் மக்கள் பணத்தை கொத்து கொத்தாக இழந்துள்ளனர். போர் பதற்றம் காரணமாக டாலர் சரியும் சூழல் உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க மக்கள் பங்குச்சந்தையை விட்டு வெளியேறினர். இதனால் சரிவு ஏற்பட்டது. தொடரும் அமெரிக்க வர்த்தக சரிவு பங்குச் சந்தைகள் சரிந்ததால், முதலீட்டாளர்கள் அனைத்துத் துறை பங்குகளையும் விற்று வெளியேறினர். டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.8% சரிந்து 800-க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்தது. S&P 500 குறியீடு சுமார் 2%ம், நாஸ்டாக் கலப்பு குறியீடு 2.4%க்கு மேலும் வீழ்ச்சியடைந்தன.
இச்சரிவுகள் முக்கியக் குறியீடுகளின் இந்த ஆண்டு ஆதாயங்களை முழுமையாக அழித்தன. அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நீண்ட வர்த்தகப் போராட்ட அபாயத்தை முதலீட்டாளர்கள் உணர்ந்தது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கிரீன்லாந்தை வாங்கும் ஒப்பந்தம் வெற்றி பெறாவிடில், எட்டு நேட்டோ நாடுகள் 10% இறக்குமதி வரிகளை எதிர்கொள்ளும் என டிரம்ப் கடந்த வாரம் எச்சரித்தார். $108 பில்லியன் பதிலடி வரி விதிக்கப்படும் என்று கூறினார். இன்னொரு பக்கம் கிரீன்லாந்து மீது ஆயுத அட்டாக் நடத்தி அந்த நாட்டை கைப்பற்றுவதற்காக டிரம்ப் முயல்வதாக வெளிப்படையாக அறிவித்தார். கிரீன்லாந்து சுயமாக இறங்கி வந்து நாட்டை கொடுத்தால் அதற்கான பணம் கொடுக்கப்படும், இல்லையென்றால்.. கிரீன்லாந்து மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். இந்த போர் பதற்றங்கள் காரணமாகவே மார்க்கெட் சரிந்து உள்ளது. உடையும் நேட்டோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் புதிய வரிகளை விதித்ததை அடுத்து நேட்டோ குழுக்கள் உடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ஐரோப்பிய நாடாளுமன்றம் அட்லாண்டிக் கடல்கடந்த வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.















