டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: ஜூலை 24 –
மத்திய அரசுக்கு எதிராக 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தமிழக விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்பபாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் கையில் நெற்கதிர்கள் மற்றும் பதாகைகளை வைத்தும், கோஷமிட்டும் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நம் நாட்டில் மத்திய அரசு சார்பில் மரபணு திருத்தப்பட்ட பயிர்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பருத்தி, நெல் உள்ளிட்ட மரபணு திரத்தப்பட்ட பயிர்கள் அறிமுகமாகி உள்ன. இதற்கு சில விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகசூல் நன்றாக கிடைக்கும் என்று சொல்லப்படுவதால் ஒரு தரப்பினர் ஆதரவாக உள்ளனர்.
மறுபுறம் இன்னொரு தரப்பு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரபணு திருத்தப்பட்ட பயிர்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். தமிழகத்திலும் மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விவசாய அமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் தமிழக விவசாயிகள் சார்பில் டெல்லியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் கையில் நெற்கதிர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர். அப்போது தமிழக விவசாயிகள் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு இந்தியாவில் 5,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் நகரங்கள் உள்ளன. இந்த நெல் ரகங்கள் மட்டுமே வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கி வளரும். இதனால் மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.