Home செய்திகள் உலக செய்திகள் ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்

ட்ரோன் படகை உருவாக்கிய இந்தியர் வைபவ்

வாஷிங்டன்: ஜூன் 11-
ஹார்முஸ் ஜலசந்தி​யில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ஹெலி​காப்​டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்​தி​ய​போது, அதில் இருந்த 2 பைலட்​டு​கள் கடலில் குதித்தனர். அவர்​களை மீட்க அனுப்​பப்​பட்ட ட்ரோன் படகின் தயாரிப்​பில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த வைபவ் முக்​கிய பங்​காற்​றி​யுள்​ளார்.
ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டரை ஈரான் ராணுவம் கடந்த திங்​கள் கிழமை சுட்டு வீழ்த்​தி​யது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கடலில் குதித்​தனர்.இவர்​களை அமெரிக்க கடற்​படை​யில் உள்ள கார்​சேர் என்ற ட்ரோன் படகு 2 மணி நேரத்​தில் உயிருடன் மீட்​டது. 24 அடி நீளமுள்ள இந்த படகு ரிமோட் கன்ட்​ரோல் மூலம் 35 நாட்டிக்கல் மைல் வேகத்​தில் 1,000 நாட்​டிக்​கல் மைல் தூரம் பயணிக்​கும் திறன் படைத்​தது. இது 1,000 பவுண்ட் எடையை சுமந்து செல்​லும்.
இந்த ட்ரோன் படகை அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் உள்ள சரோனிக் டெக்​னாலஜிஸ் என்ற நிறு​வனம் உரு​வாக்​கியது.