Home விளையாட்டு தகுதி சுற்று 1: ஆர்சிபி – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

தகுதி சுற்று 1: ஆர்சிபி – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

தரம்சாலா, மே 26- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடை​பெறும் தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, முன்​னாள் சாம்​பிய​னான குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இரு அணி​களுமே லீக் சுற்றை தலா 18 புள்​ளி​கள் பெற்று முதல் இரு இடங்​களு​டன் நிறைவு செய்​திருந்​தன. நிகர ரன் விகித அடிப்படை​யில் ஆர்​சிபி அணி முதலிடத்தை பிடித்​திருந்​தது. ஆர்சிபி, குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய இரு அணி​களுமே இந்த சீசனில் மிகவும் நிறை​வான அணி​களாகத் திகழ்​கின்​றன. கேப்டன் ரஜத் படி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி அணி அதிரடியான பேட்​டிங் மற்​றும் கடந்த சீசன்​களைக் காட்​டிலும் மிகவும் நம்​பகத்​தன்மை வாய்ந்த பந்​து​வீச்​சுப் படை ஆகியவற்றைக் கொண்டே கட்டமைத்துள்​ளது. நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி, இந்த சீசனில் 8 முறை 200 ரன்​களுக்கு மேல் குவித்து அசத்​தி​யுள்​ளது. தொடக்க வீர​ராக களம் இறங்​கும் ஜாம்​ப​வான் விராட் கோலி​யின் அபார அனுபவ​மும், பந்து​வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் வேகப்​பந்து வீச்சு கூட்​ட​ணி​யின் பங்​களிப்​பும் அந்த அணிக்கு மிகப்​பெரிய அளவில் பலன் அளித்​துள்​ளன. பேட்டிங்கில் தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், வெங்​கடேஷ் ஐயர், டிம் டேவிட், கிருணல் பாண்​டியா ஆகியோ​ரும் தங்​களது பங்களிப்பை வழங்கி வரு​கின்​றனர். தங்​கள் சொந்த மைதானம் அல்​லாத பிற மைதானங்​களி​லும் வெற்றி பெறும் திறன் மற்​றும் நூலிழை​யில் நகரும் பரபரப்​பான போட்​டிகளை வெற்​றிகர​மாக முடிக்​கும் சாமர்த்​தி​யம் ஆகிய​வை, லீக் சுற்​றில் மிக​வும் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்​திய சிறந்த அணி​களில் ஒன்​றாக ஆர்​சிபியை மாற்​றின. அது​மட்​டுமின்​றி, தரம்​சாலா மைதானத்​தின் சுழல் மற்​றும் வேகம் குறித்த நில​வரத்தை அறிந்​திருப்​பது ஆர்​சிபிக்கு கூடு​தல் சாதக​மாக உள்​ளது. ஏனெனில், இதே மைதானத்​தில் கடந்த 17-ம் தேதி பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி வெற்றி கண்​டிருந்​தது. மறு​புறம் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி தங்​களின் அச்​சுறுத்​தக்​கூடிய பந்​து​வீச்​சுப் படை மற்​றும் எதிரணி​யின் அழுத்​தத்தை தங்களுக்குள் துளி​யும் புக​வி​டாத டாப்​-ஆர்​டர் பேட்​டிங் வரிசையின் பலத்​தால் பிளே-ஆஃப் சுற்​றுக்​குள் கம்​பீர​மாக நுழைந்​துள்​ளது. கேப்​டன் ஷுப்​மன் கில், திறம்பட விளை​யாடும் சாய் சுதர்​சன், அதிரடி விக்​கெட் கீப்​பர்​-பேட்​ஸ்​மேன் ஜாஸ் பட்​லர் ஆகியோர் அணிக்​குத் தேவை​யான ஸ்திரத்​தன்​மை​யை​யும் அதே நேரத்​தில் அதிரடி ஆட்​டத்​தை​யும் சரிசம​மாக வழங்கி வருகின்றனர்.