Home விளையாட்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலினி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், பவுலினி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸ், மே 26- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளானா நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான போலந்​தின் இகா ஸ்வியாடெக், வைல்டு கார்டு வீராங்கனையான ஆஸ்​திரேலி​யா​வின் எமர்​சன் ஜோன்​ஸுடன் மோதி​னார். ஒரு மணி நேரம் நடை​பெற்ற இந்த ஆடத்​தில் 3-ம் நிலை வீராங்கனை​யான ஸ்வியா டெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 2-வது சுற்​றில் ஸ்வியா டெக், செக் குடியரசின் சாரா பெஜ்லெக்​குடன் மோதுகிறார். 7-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 3-6, 6-1, 7-6 (10-3) என்ற செட் கணக்​கில் 57-ம் நிலை வீராங்​க​னை​யான ஹங்​கேரி​யின் அனா போந்​தரை​யும், 13-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி 7-5, 6-3 என்ற செட் கணக்​கில் 45-ம் நிலை வீராங்​க​னை​யான உக்ரைனின் டயானா யாஸ்​டிரேம்​ஸ்​காவை​யும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்​ப​தித்​தனர். 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் 84-ம் நிலை வீராங்​க​னை​யான சுலோவேனி​யா​வின் வெரோனிகா எர்​ஜாவெக்​கை​யும், 23-ம் நிலை வீர​ராங்​க​னை​யான பெல்​ஜி​யத்​தின் எலிஸ் மெர்​டன்ஸ் 7-5, 6-0 என்ற செட் கணக்​கில் 54-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெர்மனி​யின் தத்​ஜனா மரி​யா​வை​யும் வீழ்த்​தினர்.