
சென்னை: ஜனவரி.1-
சென்னையில் இன்று (ஜனவரி 01) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 99 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளிக்கு, அந்நாடு சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் (டிசம்பர் 30) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 420 ரூபாய் குறைந்து, 12,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,360 ரூபாய் சரிவடைந்து, 1,00,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 258 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 23,000 ரூபாய் சரிவடைந்தது, 2.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.















